ஜொலிஜொலித்த தேனி.. போடி டூ சென்னைக்கு ரயில் சேவை.. குஷியில் "போடிநாயக்கனூர்".. தூள்கிளப்பும் ரயில்வே

Subscribe to Oneindia Tamil

மதுரை: வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு வரப்போவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.. இந்த மகிழ்ச்சிக்கு இடையே, போடிக்கு ரெயில் சேவையும் ஆரம்பமாகி உள்ளது.. 12 வருடங்களுக்கு இப்படியொரு சேவை கிடைத்துள்ளதால், போடி நகரமே விழாக்கோலம் பூண்டது.
மதுரை - போடி வழித்தடத்தை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்காக, கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த வருடம் மே 27-ம் தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது...

சோதனை: இந்நிலையில், போடி வரை இந்த ரயில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. இதற்காக ஓஎம்எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரயில் மூலம் நேற்றுமுன்தினம் சோதனை நடந்தது.. தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.. பின்னர், இது தொடர்பான அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில், நேற்று முதல் போடிக்கு ரயில் சேவை தொடங்கி உள்ளது.

vande bharat train to nallai and Bodi rail service to chennai central: Theni madurai people are happy

அதன்படி, மதுரையில் இருந்து தினசரி ரெயில்(06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப்போடியை வந்தடைகிறது. மறுபடியும் 5.50-க்கு புறப்படும் இந்த ரெயில் (06702), இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது. இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரெயில் (20601) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.

சென்ட்ரல்: மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரெயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது... இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி, முன்பதிவு பெட்டிகள் 4, 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல்வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

முதல் ஸ்லீப்பர் கோச்சுக்கு ரூ.390, 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ரூ.1025, 2-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.1445, முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2415 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் : 20602) சேவையைதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்துள்ளார்.. இந்த நிகழ்ச்சியில் தேனி எம்பி, ரவீந்திரநாத், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், உள்பட பலர் பங்கேற்றனர்.

ரயில்சேவை: வழக்கம்போல, ரயில்சேவை துவக்க விழாவை போல இல்லாமல், இந்த நிகழ்ச்சி படுபிரம்மாண்டமாக நடைபெற்றது.. போடிநாயக்கனூரே திருவிழா போல காட்சி அளித்தது.. காரணம், 12 வருடங்களுக்கு பிறகு, ரயில்சேவை வருவதால், போடி ரெயில் நிலையத்தில் மக்கள் திரண்டு வந்தனர்.. உற்சாக வெள்ளத்தில் கோலாகலமாகமாகவே இந்த விழா நடந்து முடிந்தது..

ரெயில் நிலைய பகுதிகள் மற்றும் ரெயில் நிலையம் செல்லும் வழிகளில் ஏராளமான வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன... பார்ப்பதற்கே போடி நகர் விழாக்கோலமாக காட்சி அளித்தது.

vande bharat train to nallai and Bodi rail service to chennai central: Theni madurai people are happy

நெகிழ்ச்சி: தேனி மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் இப்போது போடியில் இருந்து சென்னை வரை ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளதாலேயே, பொதுமக்களும், வியாபாரிகளும் பெருத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இத்தனை காலமும், தேனி, கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள், சென்னைக்கு செல்ல வேண்டுமானால் மதுரை வந்துதான் செல்ல வேண்டியிருந்தது..

இதற்காக நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து வந்தனர்.. இனி பஸ்ஸுக்காகும் நேரம் நிச்சயம் குறையும் என்பதுடன், எளிதான பயணத்தையும் மேற்கொள்ள முடியும் என்று பூரித்து சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+