மயிலாப்பூரில் பரபரப்பு.. கபாலீஸ்வரர் தெப்பக்குளத்தில் ஆண் பிணம் மிதந்தது!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் காவல்நிலைய போலீசார், இது கொலையா? தற்கொலையா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பால் உடனுறை கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. சென்னையில் பிரச்சித்த பெற்ற இந்த கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண்டுக்கு ஒரு முறை தெப்பத்திருவிழா நடைபெறும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெப்பத்திருவிழா நடைபெற்றது.

இதற்காக தெப்பகுளம் சுத்தப்படுத்தப்பட்டது. தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்று பிற்பகல் கோவில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்தது. இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடையாளம் தெரியாத அந்த நபரின் சடலம் கோவில் தெப்பக்குளத்திற்கு வந்தது எப்படி என்றும், கொலையா? தற்கொலையா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications