மதுரையில் அதிமுக அலுவலக வாசலில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் உள்ள அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட அலுவலக வாசலில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரை கீழமாசி வீதியில் அதிமுகவின் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலக வாசலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் அந்த அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்தனர்.
கோவில் நகரமான மதுரையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே வெடிகுண்டு கண்டுபிடிப்பதை பார்த்து மதுரை மக்கள் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications