மதுபாட்டில் சரக்கு லாரியில் வெடிகுண்டு… அதிமுக கொடியுடன் சொகுசு கார் பறிமுதல்… சதியின் பரபர பின்னணி

டாஸ்மாக் குடோனுக்கு சென்ற மதுபான சரக்கு லாரியில் வெடிகுண்டுகள் இருந்தது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக கொடியுடன் இருந்து சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: அரசு மதுபான குடோனுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரியில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் விளமல் பகுதியில் அரசு மதுபான கிடங்கு செயல்பட்டு வருகிறது. கோவை மதுபானத் தொழிற்சாலையில் இருந்து இந்த குடோனுக்கு மதுபான பாட்டில்கள் ஏற்றி செல்லப்பட்டன.

மதுபான சரக்கு லாரியில் வெடிகுண்டுகள் இருப்பதாக எண்ணூர் காவல் நிலையத்திற்கு மர்ம போன் ஒன்று வந்தது. இதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் லாரியை ஆய்வு செய்தனர்.

Bomb found in lorry, luxury car seized

மர்மம்

இந்த சோதனையின் போது, வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கைது

இதனையடுத்து லாரியுடன் வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மோகன் சென்னையை அடுத்த எண்ணுரை சேர்ந்தவர் என்பதும், ராஜ்குமார் திருச்சியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

அதிமுக கொடி

இவர்கள் இருவரையும் விசாரித்ததில் அந்தப் பக்கம் சுற்றித் திரிந்த கார் வெடிகுண்டு ஏற்றி வந்த லாரியுடன் தொடர்புடையது என்று தெரிய வந்தது. அதிமுக கொடியுடன் வலம் வந்த அந்தக் காரை போலீசார் காலை பறிமுதல் செய்தனர்.

சொகுசு கார்

அந்த சொகுசு காரிலேயே போலீசார் கைது செய்யப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினர். கார் குறித்து துருவி துருவி போலீசார் விசாரித்தனர். இதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பிரமுகர்?

விசாரணையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொகுசு கார், சென்னை சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பருக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டிருப்பதால் சொகுசுக் காருக்கு சொந்தக்காரரான ரவி அதிமுகவைச் சேர்ந்தவரா என்றும் அப்படி என்றால் எந்த அணியில் இருக்கிறார் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+