வந்தவாசி கோயில் வளாகத்தில் வெடிகுண்டு.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்!
ஆலய வளாகத்தில் வெடிக்காத நிலையில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
வந்தவாசி: வந்தவாசி ரெங்கநாதர் கோயிலில் வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பழமை வாய்ந்த ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், பிரகாரத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஒரு மூதாட்டி காலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது உருண்டையாக சணலும் திரியும் சுற்றப்பட்ட ஒரு பொருள் கீழே கிடந்ததை கண்டார். அதை எடுத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அவர் வேலையை தொடர்ந்தார்.
திடீரென்று அந்த உருண்டை வடிவ பொருளிலிருந்து வெடிமருந்துகள் கொட்ட ஆரம்பித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறி அடித்து கோயிலிலிருந்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், மர்மபொருளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் சக்திவாய்ந்த நாட்டு வெடிமருந்துகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வெடிக்காத நிலையில் கிடந்த மர்மபொருளை போலீசார் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
தொடர்ந்து, வெடிகுண்டினை கோயிலுக்குள் வீசியவர் யார்? நாசவேலைகளுக்காக வெடிமருந்து நிரப்பப்பட்டதா? என்பன குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications