சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- புரளி என தகவல்
சென்னை: சென்னை ராஜிவ்காந்தி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு மர்மநபர்களால் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நோயாளிகள், பார்வையாளர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப் படுகின்றனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் தொலைபேசி வாயிலாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். போனில் பேசிய நபர், ராஜிவ்காந்தி மருத்துவமனை மட்டுமின்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் இரண்டு மருத்துவமனையிலும் சோதனை நடத்தினர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஒவ்வொரு பிளாக்கிலும் 5 மாடிகளுடன் மொத்தம் 3 பிளாக்குகள் உள்ளன. எனவே அதிகாலை 3 மணிக்கு இங்கு தொடங்கிய சோதனை காலை வரை நீடித்தது.
ஆனால், இரண்டு மருத்துவமனைகளிலும் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சோதனையில் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
போனில் பேசிய நபர் குடிபோதையில் பேசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போன் நம்பர் மூலம் மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தபோதும், இரண்டு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பலத்த சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications