2 பள்ளிகளுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் - சென்னையில் பதற்றம்
சென்னை: சென்னைப் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக இன்று காலை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளி மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி ஆகிய 2 பள்ளிகளிலும் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக இது தொடர்பாக வளசரவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளூக்கு விரைந்த அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பள்ளிகளில் படித்து வரும் ஆயிரக் கணக்கான மாணவர்களை பத்திரமாக மைதானத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், பள்ளி முழுவதும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணைக் கொண்டு அதில் பேசிய மர்மநபரைப் போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிகளில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவலால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications