சென்னை: ஆவடி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடாங்காத நிலையில் ஆவடி ரயில் நிலையத்தை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
நேற்று காலையில்தான் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுகள் வெடித்தன. இதில் 22 வயதான ஸ்வாதி என்ற பெண் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் ஆவடி ரயில் நிலையத்தைக் குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக ஒரு மிரட்டல் வந்துள்ளது. ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த அந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. தொடர்ந்து போலீஸார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆவடி ரயில் நிலையத்தில் சோதனையிட்டனர். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது வெடிகுண்டு புரளியாகத்தான் இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஒரு ரூபாய் காயின் போட்டு பேசும் போனிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சென்ட்ரல் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த தொலைபேசி அழைப்பு சீரியஸாக எடுத்துக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications