மதுரை விமான நிலையத்தை குண்டு வைத்துத் தகர்ப்போம்.. மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை விமான நிலையம் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று வந்த மர்மக் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை விமான நிலைய அதிகாரிக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் விமான நிலையம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்ற தகவல் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் இந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட்டு விமான நிலைய அதிகாரி சார்பில் புகார் ஒன்றும் தரப்பட்டு. புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் விசாரணையை முடுக்க விட்டுள்ளனர். இந்தக் கடிதம் தஞ்சாவூரிலிருந்து வந்ததாக தெரிகிறது. யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications