வெடிகுண்டு மிரட்டல்: சென்னை வணிக வளாகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்களுக்கு தீபாவளி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள உளவு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இ-மெயில் ஒன்று வந்தது. அதில், சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்களான ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஆகியவற்றில் 3 தினங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் இந்த இ-மெயில் தாய்லாந்தில் இருந்து வந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அந்த வணிக வளாகங்களில் சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து சென்னையில் உள்ள வணிக வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்கை வாக், ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சிட்டி சென்டர், அல்சா மால் உள்பட 16 பெரிய மற்றும் சிறிய வணிக வளாகங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வணிக வளாகங்களில் ஏற்கனவே தனியார் நிறுவன பாதுகாவலர்கள் உள்ளனர். கூடுதலாக போலீஸ் மற்றும் அதிரடிப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும். என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications