"கண்ணம்மா" போஸ் வெங்கட்டுக்கு சீட் தருவாரா கருணாநிதி?
புதுக்கோட்டை: சீரியல் நடிகராக அறிமுகமாகி தற்போது, சினிமா நடிகராக வலம் வருகின்ற நடிகர் "போஸ்" வெங்கட் அறந்தாங்கி தொகுதியில் சீட் கேட்டு திமுகவில் விருப்ப மனு கொடுத்துள்ளாராம்.
தமிழில் முதன்முதலாக மெட்டி ஒலி சீரியல் மூலமாக அறிமுகமான போஸ் வெங்கட், அந்த நாடகத்தில் அவரது கதாப்பாத்திரமான போஸ் என்ற அடைமொழியுடனேயே அழைக்கப்பட்டு வருகின்றார்.
அதன்பின்பு பாரதிராஜவின் ஈரநிலம் படத்தில் வில்லனாக அறிமுகமாகி சினிமாவிற்குள்ளும் காலடி எடுத்து வைத்தார்.

கண்ணம்மா கண்ணம்மா:
தன்னுடன் நடித்த சக நடிகையான சோனியாவை திருமணம் முடித்துள்ள வெங்கட்டுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தீவிர திமுக குடும்பத்தில் இருந்து வந்துள்ள வெங்கட் திமுக தலைவர் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்த "கண்ணம்மா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், அவருடைய கதை, வசனத்தில் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

திமுகவில் விருப்பமனு:
இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு விண்ணப்பித்துள்ளார். திமுகவிற்காகவே அர்ப்பணிப்பான தன்னுடைய குடும்பத்தின் சார்பில் போட்டியிட சீட் கேட்டுள்ளதாகவும், கட்சிக்காக பாடுபடுவதே தன்னுடைய முதல் கொள்கை என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரத்தத்தில் கலந்த கட்சி:
2011ல் காஞ்சி, உத்திரமேரூரில் 30 நாள் கடும் பிரச்சாரம் செய்துள்ளதாகவும், அறந்தாங்கி நகராட்சியை தி.மு.க கைப்பற்ற தீவிர பிரச்சாரம் செய்துள்ளதாகவும், திமுக கட்சியும், கருணாநிதியும் தன்னுடைய ரத்தத்தில் கலந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவயதிலேயே திமுகவிற்காக அருவாள் எடுத்தவன் நான் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த டார்கெட்:
ஏற்கனவே சின்னத்திரை சங்க தேர்தல்களில் போட்டியிட்டு செயலாளராக பதவி வகித்த போஸ் வெங்கட், தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடக் களத்தில் குதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications