குளிர்பானம் என நினைத்து ஆசிட் குடித்த 7 வயது சிறுவன் பலி
புதுவை: புதுவையில் தவறுதலாக குளிர்பானம் எனக் கருதி ஆசிட்டைக் குடித்த 7 வயது சிறுவன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
புதுவை கதிர்காமம் காமராஜர் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது ஏழு வயது மகன் தருண்ராஜ். இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
நாகராஜ் வீட்டில் தங்கி தனியார் பள்ளி ஒன்றில் வேதியியல் ஆசிரியராக பணி புரிந்து வரும் அவரது மைத்துனர் பிரகாஷ், பள்ளி புராஜக்ட் ஒர்க்கிற்காக குளிர்பான பாட்டிலில் ஆசிட் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்திருக்கிறார்.
இதையறியாத சிறுவன் தருண்ராஜ், நேற்று காலை குளிர்பான பாட்டிலில் இருந்த ஆசிட்டை தவறுதலாக குடித்து விட்டதாகத் தெரிகிறது. இதில் குடல் முழுவதும் வெந்த நிலையில் அலறி துடித்த சிறுவனை அவனது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சிறுவன் தருண்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications