கள்ளக்காதலியுடன் அடிக்கடி உல்லாசம்.. சலித்துபோன வாழ்க்கை.. கிணற்றில் வீசி கொலை செய்த காதலன்!
Recommended Video

சிவகாசி: சிவகாசியில் அடிக்கடி கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததில் போரடித்ததால் வேறு பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்த காதலன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரிபாண்டி. கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருபவர் மாரீஸ்வரி. இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரிபாண்டிக்கு அவரது வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினர்.

மாரிபாண்டியின் மனதில்...
இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தார் பாண்டி. பின்னர் மாரீஸ்வரியுடனான உறவில் போர் அடித்துவிட்டது. இதனால் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மாரிபாண்டியின் மனதில் தோன்றியது.

இருவருக்கும் வாக்குவாதம்
இதனால் மாரிபாண்டியும் திருமணம் செய்து கொள்ள வீட்டில் சம்மதம் தெரிவித்துள்ளார். இது மாரீஸ்வரியின் காதுகளை எட்டியது. அப்போதுதான் தன்னை உடல் தேவைக்கு மட்டும் மாரிபாண்டி பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து மாரிபாண்டியிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாரிபாண்டியை மிரட்டிய மாரீஸ்வரி
அப்போது இவ்வளவு நாட்கள் என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தற்போது புது வாழ்க்கை வாழ எண்ணம் துளிர்விட்டுவிட்டதா. உன்னை சும்மா விடமாட்டேன். நீ எப்படி திருமணம் செய்து கொள்கிறாய் என்பதை நானும் பார்க்கிறேன் என்று மாரீஸ்வரி, மாரிபாண்டியை மிரட்டியுள்ளார்.

கிணற்றில் வீசிய காதலன்
இதனால் ஆத்திரம் அடைந்த மாரிபாண்டி, மாரீஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்டு கை, கால்களை கட்டி செங்கமலநாச்சியார்புரம் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு வெளியூருக்கு தப்பி சென்றுவிட்டார்.

உத்தரவு
அவ்வழியே போவோர் கிணற்றில் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சிவகாசி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாரீஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications