சென்னை: மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்
சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
காசிமேட்டை சேர்ந்த பள்ளி மாணவர் ரமேஷ் (17). கடந்த 7-ம் தேதி பள்ளி வகுப்பறையில் இவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து ரமேஷ் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், மாணவனின் மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்தது தெரியவந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் மாணவன் ரமேஷ் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்த டாக்டர்கள் அதை அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து தங்கள் மகனின் உடல் உறுப்பு களை தானம் செய்ய அவரது பெற்றோர் விருப்பம் தெரிவித்தனர்.
அதன்படி மாணவனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.
அவரது ஒரு சிறுநீரகம், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும் மற்றொரு சிறுநீரகம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும் பொருத்தப் பட்டது.
இதயம் மற்றும் நுரையீரல் முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
இதுதொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை டீன் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:
மாணவனின் ஒரு சிறுநீரகத்தை இங்கு சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்தியுள்ளோம். அவர் தற்போது நலமாக இருக்கிறார். மற்ற உறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications