சென்னை அருகே 3 அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்ட பாலம் மூன்றாவது நாளில் சேதம்!
சென்னை: திருவள்ளூர் அருகே, ரூ.90 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு, மூன்று அமைச்சர்களால் திறந்து வைத்த தரைப்பாலம் 3ம் நாளிலேயே மீண்டும் சேதமடைந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையடுத்த, திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் கிராமத்திலிருந்து, திருநின்றவூர், பெரியபாளையத்தை இணைக்க, கூவம் ஆற்றின் குறுக்கே, 1968ல் தரைப்பாலம் கட்டப்பட்டது.

கன மழையால், கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், தரைப்பாலத்தின் இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சேதமானது. சுமார் ஒருமாதமாக பாலத்தில் போக்குவரத்து தடைபட்டது.
மழை நின்றதால், கடந்த 8ம் தேதிமுதல் பாலத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில், 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, நடுவில் மணல் மூட்டைகளை அடுக்கி, கிராவல் மண் கொட்டி, பாலத்தை ரூ.90 லட்சம் செலவில் சீரமைத்தனர்.
கடந்த 17ம் தேதி நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட அமைச்சர்கள் ரமணா, அப்துல் ரஹீம், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் பாலத்தில் போக்குவரத்தை மீண்டும் துவக்கி வைத்தனர். பஸ்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், போக்குவரத்தை துவக்கிய 3வது நாளிலேயே சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் சேதமாகியுள்ளது. இது வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதையடுத்து போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டு, பொக்லைன் மூலம், பெரிய பைப்புகளை புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீண்டும் அவதியில் உள்ளனர். பாலத்திற்கு செலவிட்ட தொகை கணக்கில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications