பிரிட்ஜோவின் உடலை பார்த்து மயங்கிய தாய், தம்பி... போராட்ட களததில் உருக்கம்...

ராமேஸ்வரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் போராட்டக் களத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிரிட்ஜோவின் உடலை கண்ட அவரது தாயும், தம்பியும் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் இருந்து தங்கச்சிமடத்துக்கு கொண்டு வரப்பட்ட பிரிட்ஜோவின் உடலை பார்த்ததும் அவரது தாயும், தம்பியும் மயங்கி விழுந்தனர்.

இந்திய கடல் எல்லையில் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடந்த 6-ஆம் தேதி இலங்கை கடற்படையிநர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவரின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார்.

Bridjo's body was taken in procession to Thangachchimadam

இதைத் தொடர்ந்து மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்திர தீர்வு காணும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி தங்கச்சிமடத்தில் மீனவர்களும், உறவினர்களும் கடந்த 7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர்களின் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, பிரிட்ஜோவின் உடலை இன்று அடக்கம் செய்யவுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜோவின் உடலை அவரது சித்தப்பா ஜஸ்டின் கடந்த 7 நாள்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்டார்.

பின்னர் வாகனத்தில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து தங்கச்சிமடத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. தங்கச்சிமடத்தில் போராட்ட களத்தை அடைந்த பிரிட்ஜோவின் உடலை பார்த்த அவரது தாயும், சகோதரனும் மயங்கினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+