கேப்டன் தலைமையில் கூட்டணி... வர்றவங்க வாங்க... கூப்பிடும் பிரேமலதா!
வேலூர்: சட்டசபை தேர்தலுக்கு, விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அந்த அணி கட்டாயம் வெற்றி பெறும். விஜயகாந்த் தலைமையில், புதிய ஆட்சி அமையும் என்று தே.மு.தி.க., மகளிர் அணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.
'யாரிடமோ சூட்கேஸ் வாங்கிக் கொண்டு கருத்து கணிப்பை நடத்தி, முடிவுகளை பொய்யாக வெளியிடுகின்றனர், என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலுார் மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், மக்களுக்காக மக்கள் பணியில், நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, திருப்பத்துாரில் நடந்தது. விஜயகாந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய பிரேமலதா ஆரம்பத்திலேயே டாப் கியரில் ஆரம்பித்தார்.

நேரடி ஒளிபரப்பு
சட்டசபைக்கு விஜயகாந்த் வந்தால், ஜெயலலிதா மிரண்டு போகிறார்.
'விஜயகாந்த் ஏன் சட்டசபைக்கு வருவதில்லை' என, பத்திரிகையாளர்கள் கேட்கின்றனர். சட்டசபையில் நடப்பதை நேரடி ஒளிபரப்பு செய்தால், சபையில் நடப்பது அனைத்தும், அப்படியே மக்களுக்கு சென்று சேரும்.அப்படியொரு சூழ்நிலை உருவானால், முதல் ஆளாக விஜயகாந்த், சட்டசபைக்கு வருவார்.

கருத்துக்கணிப்பு
சில நாட்களுக்கு முன், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக, கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில், அடுத்த முதல்வராக, ஜெயலலிதாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும்; அதற்கு அடுத்ததாக ஸ்டாலின், கருணாநிதிக்கு வாய்ப்பு இருப்பதாகவும்; விஜயகாந்துக்கு வெறும், 6 சதவீதம் தான் வாய்ப்பு எனவும் சொல்லி உள்ளனர்.இதற்காக, யாரிடம் சூட்கேஸ் வாங்கினார்களோ தெரியவில்லை.

வாக்கு வங்கி
2006 தேர்தலில், நாங்கள் தனித்து போட்டியிட்டு, 8.23 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்கிறோம்; அதன் பின், 10 சதவீதம் பெற்றிருக்கிறோம். ஆனால் இப்போது, தே.மு.தி.க.,விற்கு 4 சதவீத ஓட்டு தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

கேப்டன் தலைமையில்
சட்டசபை தேர்தலுக்கு, விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அந்த அணி கட்டாயம் வெற்றி பெறும். விஜயகாந்த் தலைமையில், புதிய ஆட்சி அமையும். தி.மு.க., ஆரம்பித்த திட்டங்களையெல்லாம், அ.தி.மு.க., அரசு மூடிவிட்டது. ஆனால், 'டாஸ்மாக்'கை மட்டும் மூடவில்லை.

தாலி பறிப்பு
பெண்களின் தாலிக்கு தங்கம் கொடுக்கும் அதிமுக அரசுதான் டாஸ்மாக்கை திறந்து வைத்து அதே தாலியை பறிக்கிறது. கொடநாடு செல்லும் வழியில் உள்ள ஒரு பள்ளியை மூடிவிட்டு, அதில், வெளிநாட்டு உயர்ரக மதுக்கடையை திறந்துள்ளனர்.

மொபைல் ரேசன் கார்டு
தே.மு.தி.க., ஆட்சிக்கு வந்தால், நரிக்குறவர்களுக்கு, 'மொபைல், ரேஷன் கார்டு' வழங்கப்படும். அவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும், ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறி முடித்தார் பிரேமலதா.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications