வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் விறுவிறு வாக்குப் பதிவு..!
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு மிகக் கடுமையான வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்து பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தைப் பறித்த நான்கு முக்கியமான மாவட்டங்களில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தை கடந்த ஆண்டு இறுதியில் புரட்டிப் போட்டது கடும் மழையும், எதிர்பாராத வெள்ளமும். குறிப்பாக கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

கடலூர் மாவட்டத்தில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். சென்னை பெரு வெள்ளத்தில் மூழ்கிப் போனது. பல லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானார்கள். இதே நிலைதான் பிற 3 மாவட்டங்களிலும்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இந்த நான்கு மாவட்டங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. முற்பகல் 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருவள்ளூரில் 30 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடலூரில் 27 சதவீதமும், சென்னையில் 25 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 21 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
தொடர்ந்து இந்த நான்கு மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக உள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications