"கால்" செய்தால் போதும் "ஹோம் டெலிவரி":... பெங்காலி அழகியுடன் "ராஜா மாமா" கைது!
கோவை: போன் செய்தால் வீட்டுக்கே விபச்சார அழகிகளை சப்ளை செய்த புரோக்கரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவருடன் வந்த பெங்காலி அழகியை போலீஸார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விபசாரம் கொடிகட்டி பறப்பதாக போலீசுக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் வந்தன. இதையடுத்து இந்தக் கும்பலின் அட்டகாசத்தை ஒடுக்க மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் நடவடிக்கையில் குதித்தனர்.
இந்த நிலையில் போன் செய்தால் வீடுகளுக்கே அழகிகளை ஒரு கும்பல் அனுப்பி வைக்கும் விவரம் தெரிய வந்தது. இதையடுத்து பீளமேடு போலீஸார் களத்தில் குதித்தனர். அந்த நம்பருக்கு போன் செய்தனர். போனை எடுத்த வாலிபரிடம் எங்களுக்கு அழகி வேண்டும். கோவைக்கு அழைத்து வர முடியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர் சிட்டிக்குள் போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளது. எனவே புறநகர் பகுதிக்கு அழகியுடன் வருகிறோம். நீங்கள் சின்னியம்பாளையம் பகுதிக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
போலீஸாரும் கூறிய இடத்தில் காத்திருந்தனர். அப்போது அந்த நபர் வந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இருந்தார். அவர்களைப் போலீஸார் மடக்கி் பிடித்தனர். அந்தப் பெண் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். கைது செய்யப்பட்ட புரோக்கரின் பெயர் ராஜா.
இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். பல்வேறு மாநிலங்களிலிருந்து அழகிகளை அழைத்து வந்து ஹோம் டெலிவரி செய்து விபச்சாரம் நடத்தி வந்தார். அவரைப் போலீஸார் சிறைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட பெண்ணை போலீஸார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications