சென்னையில் பயங்கரம்.. அண்ணன், தங்கை வெட்டிப் படுகொலை.. குடும்பத் தகராறில் சண்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் குடும்பத் தகராறு காரணமாக அண்ணன், தங்கை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சாய்பாபா நகரில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அண்ணன், தங்கை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Brother Sister Murder in chennai

அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த ஒரு பெண் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 3 பேரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Brother and Sister was Murder in pallikaranai, chennai.
Please Wait while comments are loading...