Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலித்த இளம்பெண் கவுரவக் கொலை: 'சீவலப்பேரி' சகோதரர்கள் கைது!

Subscribe to Oneindia Tamil

நெல்லை அருகே சாதி மாறி காதலித்த தங்கையை விஷம் ஊற்றி கொடூரமாக கொலை செய்த அண்ணன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லையை அடுத்த சீவலப்பேரியைச் சேர்ந்தவர் கோமதி. 17 வயதான இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம், திருவேங்கடம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரும் வேலை செய்து வந்தார்.

அந்த நிறுவனத்தின் வேன் மூலம் செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு கோமதியை அவரது பெற்றோர் வேலைக்கு செல்ல விடாமல் தடுத்தனர்.

ஆனாலும் செல்போன் மூலம் முருகனுடன் பேசி வந்த அவர், கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் முருகனை தேடி அவரது ஊருக்கு சென்று விட்டார். இதனை அறிந்த கோமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முருகனின் வீட்டிற்கு சென்று சமரசம் பேசி கோமதியை திரும்ப அழைத்து வந்துவிட்டனர். நேற்று கோமதியை வீட்டில் அடைத்து வைத்து விட்டு பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர்.

அப்போது அங்கு வந்த கோமதியின் சகோதரர்கள் முருகன், சுடலைமுத்து மற்றும் உறவினர்கள், கோமதியை தாக்கி அவரது வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி கொலை செய்தனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்து விடாமல் இருப்பதற்காக அவரது கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி, தூக்கில் தொங்கியது போல் ஊரை நம்பவைத்தனர்.

மாலையில் வீடு திரும்பிய கோமதியின் பெற்றோர் மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கு வந்த சகோதரர்களும் அழுது நாடகமாடியுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக கோமதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனை செய்ததில் கோமதி தாக்கப்பட்டதும், வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கோமதியின் சகோதரர்கள் முருகன், சுடலைமுத்து ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதனை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தர்மபுரி இளவரசன் மரணத்தின் சர்ச்சை ஓய்வதற்குள், சகோதரியின் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+