Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு மாடியில் கள்ளக்காதலுடன் மனைவி.. கணவன் பார்த்த அந்த காட்சி! அதிகாலையில் அதிர்ந்த கள்ளக்குறிச்சி

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நேற்று அதிகாலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவில் கணவர் தூங்கிய பிறகு, கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து மனைவி லட்சுமி மொட்டை மாடியில் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதிகாலையில் கண்விழித்த கணவர் மனைவி அருகில் இல்லாததை பார்த்து தேடிச் சென்றுள்ளார். இதில் மொட்டை மாடியில் கள்ளக்காதலனோடு கிடந்ததை பார்த்து ஆத்திரத்தில் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இதோடு இல்லாமல், இருவரது தலைகளையும் ஒரு பையில் எடுத்துக்கொண்டு பஸ்சில் ஏறி வேலூர் சிறைச்சாலைக்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார், இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சி முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

Kallakurichi murder crime

பக்கத்து வீட்டு நபருடன் கள்ளக்காதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கொளஞ்சி. இவரது மனைவி லட்சுமி. கொளஞ்சி டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இதனால் அவ்வப்போது வீட்டுக்கு தாமதமாக வருவார். இதற்கிடையில் மனைவி லட்சுமிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த தங்கராசு என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவர் இல்லாத நேரங்களில், தங்கராசுவுடன் லட்சுமி நெருக்கமாக பழகி வந்துள்ளார். அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்ததால், அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த தகவல் கணவர் கொளஞ்சிக்குத் தெரியவந்தது. இதுபற்றி மனைவியிடம் எதிர்மறையாக பேசியும், லட்சுமி தொடர்ந்து தங்கராசுவுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

தலைகாட்ட முடியவில்லை

"வெளியில் தலைகாட்ட முடியவில்லை" என்று கூறிய பின்னரும், லட்சுமி கணவருக்குத் தெரியாமல் தங்கராசுவுடன் இரவும் பகலும் உறவு வைத்திருந்துள்ளார். கணவர் இல்லாத நேரங்களில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இரவு கணவர் தூங்கிய பிறகும், தங்கராசுக்கு போன் செய்து வரவழைத்து, பின்னர் மொட்டை மாடிக்கு சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு கணவர் மற்றும் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். கணவர் நன்கு உறங்கிய பிறகு, நள்ளிரவில் படுக்கையிலிருந்து எழுந்த லட்சுமி, தங்கராசுவுக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்பேரில் வந்த தங்கராசு, லட்சுமியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மொட்டை மாடியில் கண்ட காட்சி

அதிகாலை 3 மணியளவில் எழுந்த கொளஞ்சி, மனைவியைக் காணாததால் வெளியே தேடிச் சென்றார். மொட்டை மாடியில் பார்த்தபோது, தங்கராசுவும் லட்சுமியும் அரை குறை ஆடைகளுடன் இருந்ததைப் பார்த்து கடும் ஆத்திரமடைந்தார். இதனால் கீழே இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து இருவரையும் கழுத்தில் வெட்டினார். இதில் ரத்தம் பீறிட்டு வந்தது. எனினும் ஆத்திரம் தலைக்கேறியதால், இருவரது தலைகளையும் அறுத்து, வீட்டில் இருந்து ஒரு பையை கொண்டு வந்து அந்த தலைகளைக் கையில் எடுத்துக்கொண்டார்.

பின்னர் பஸ் நிறுத்தத்துக்குச் சென்று, வேலூர் செல்வதற்கான பஸ்சில் ஏறினார். அதிகாலை நேரம் என்பதால், கொளஞ்சியின் பையில் என்ன இருக்கிறது என்பதை டிரைவரும் கண்டக்டரும் கவனிக்கவில்லை. சுமார் 3½ மணி நேரம், துண்டிக்கப்பட்ட தலைகளுடன் எந்தவிதமான பயமும், பதட்டமும் இல்லாமல் பயணம் செய்துள்ளார்.

தலைகளுடன் போலீசில் சரண்

வேலூர் சிறைச்சாலை சென்ற அவர், அங்கு நின்ற காவலர்களிடம் பையில் இருந்த தலைகளை எடுத்து காண்பித்துள்ளார். இதனால் போலீசார் ஒரு நிமிடம் பதறினர். பின்னர் இதுபற்றி அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கொளஞ்சியை கைது செய்தனர். பின்னர் கள்ளக்குறிச்சி வரஞ்சிரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின், லட்சுமி மற்றும் தங்கராசு இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+