தாம்பரம் ரயில் நிலையத்தில் 6 துப்பாக்கி தோட்டாக்கள்- சமூக விரோதிகள் நடமாட்டமா?
தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அருகே பயணிகள் ஒய்வு அறையில் 6 துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
தாம்பரம் ரயில் நிலைய மேற்கு பகுதி நுழைவு வாயில் டிக்கெட் கவுண்ட்டர் அருகே பயணிகள் ஓய்வு அறை உள்ளது. இங்கு தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் டிக்கெட் எடுக்க வருபவர்கள் அமர்வது வழக்கம்.
இன்று காலை 3 மணி அளவில் ரயில்வே ஊழியர் முருகன் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது தரையில் சிறிய பை கிடந்தது. அதனை திறந்து பார்த்த போது 6 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் பாய்ண்ட் 32 எம்.எம் ரகம் என்பதும், அவை கை துப்பாக்கியில் பயன்படுத்தப்படுபவை என்பதும் தெரிந்தது.
லைசென்சுடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் யாரேனும் ரயில் நிலையத்திற்கு வந்த போது இந்த துப்பாக்கி தோட்டாக்களை தவற விட்டனரா அல்லது சமூக விரோதிகள் துப்பாக்கி தோட்டாவுடன் வந்த போது போலீசாரின் கெடுபிடியை கண்டவுடன் விட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications