அரசு பேருந்தில் 500 ரூபாய் நோட்டு வாங்க மறுத்த நடத்துனர்.. பாதி வழியில் தவித்த பயணி !
அரசுப்பேருந்தில் பழைய 500 ரூபாய் நோட்டு வாங்க மறுத்ததால் டிக்கெட் கட்டணம் பெற முடியாமல் பயணி ஒருவர் சிரமப்பட்டார்.
கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து சென்னை சென்ற அரசுப்பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரை நடத்துனர் பாதி வழியில் இறக்கி விட்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 8ம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகளில் பணத்தை பொதுமக்கள் மாற்றி செல்கின்றனர்.

இந்த நிலையில் நெய்வேலியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், சென்னையில் மேல் சிகிச்சை மேற்கொள்ளவதற்காக கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து புறப்பட்டு சில கிலோ மீட்டர் தாண்டிய பிறகு நடத்துனர் டிக்கெட் கட்டணம் கேட்டுள்ளார். அப்போது லோகநாதன், தன்னிடம் இருந்த 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது, சில்லரையாக பணம் கொடுங்கள் என்று நடத்துனர் கேட்டுள்ளார். அதற்கு காலையில் சில்லரை மாற்ற முடியவில்லை. உடல்நிலை சரியில்லாததால் சென்னைக்கு மருத்துவரை சந்திக்க செல்கிறேன். என்னிடம், 500 ரூபாய் நோட்டுகளை தவிர சில்லரையாக 80 ரூபாய் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். இருவருக்கும் கொஞ்ச நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடத்து
வேறு வழியில்லாமல் லோகநாதனை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார் நடத்துனர். இதுகுறித்து லோகநாதன் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் இது கும்பகோணம் கோட்ட போக்குரவத்துக் கழக பேருந்து அங்கு சென்று புகார் கூறுங்கள் என்று தெரிவித்துள்ளனர். கையில் பணம் இருந்தும் அதை செலவு செய்யவு முடியவில்லை என ஆதங்கப்பட்டார் லோகநாதன்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications