ஒப்பணகார வீதியில் கலாட்டா... குடித்துவிட்டு வெளிநாட்டு மாணவிகளை டீஸ் செய்த பஸ் டிரைவர் கைது
கோவை: கோவையில் வெளிநாட்டு மாணவிகளை பின்தொடர்ந்து கிண்டல் செய்த தனியார் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
சூடான் நாட்டை சேர்ந்த மாணவியர் நிஸ்ரின் மற்றும் ஹானா. இருவரும் கோவையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி ஒரு தனியார் கல்லுாரியில் படித்து வருகின்றனர்.
இருவரும் ஒப்பணக்கார வீதியிலுள்ள கடைகளுக்கு ஒரு பல்நோக்கு வணிக வளாகத்துக்கு சென்றனர். அப்போது ஒரு வாலிபர் இரு மாணவிகளை பின்தொடர்ந்து கிண்டல் செய்தபடி வந்துள்ளார்.
மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு தள்ளுவண்டியில் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த சிவக்குமார் என்பவரிடமும் தகராறு செய்துள்ளார். இதை கவனித்த பொதுமக்கள் வாலிபரை பிடித்து பெரியகடைவீதி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர் எட்டிமடை அய்யாசாமி கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பதும், இவர் கோவையிலுள்ள ஒரு தனியார் பஸ் டிரைவர் என்பதும் தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications