தொடரும் உயிரிழப்புகள்.. ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் போக்குவரத்து தொழிலாளி மரணம்
ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் மரணம் அடைந்து இருக்கிறார்.
சென்னை: ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் மரணம் அடைந்து இருக்கிறார். போராட்டம் காரணமாக இதோடு 4வது போக்குவரத்து ஊழியர் மரணம் அடைகிறார்.
தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடுகிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 8 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம் கேட்டு தமிழக அரசு அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பியது. இந்த நோட்டிஸை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் மைலம்பாடியை சேர்ந்த அரசு பேருந்து ஒட்டுநர் தேவராஜ் அதிர்ச்சியில் மரணம் அடைந்து இருக்கிறார். நோட்டீஸை பார்த்ததும் அவருக்கு மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தையை சேர்ந்தவர் கணேசன், 50. இவர் நோட்டீஸை பார்த்த அதிர்ச்சியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மேலும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் கண்டக்டர் செந்தில் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் இன்று மரணம் அடைந்து இருக்கிறார். விரக்தியில் மாரடைப்பு வந்து வெங்கடேசன் உயிரிழந்தார் என கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் திருச்சி மாவட்டம் கல்லணையை சேர்ந்தவர். போராட்டம் காரணமாக இதோடு 4வது போக்குவரத்து ஊழியர் மரணம் அடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications