2 ஆண்டுக்குப் பின்னர் இடிந்தகரைக்கு பொங்கல் முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம்
நெல்லை: இடிந்த கரை மீனவர் கிராமத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பொங்கல் பண்டிகை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகா வாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணு உலைக்கு எதிராக அந்தப் பகுதி கடலோர கிராம மக்கள் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடுமையான போராட்டங்களை நடத்தினர்.
இந்த போராட்டத்தினை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் 2 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடந்தி வருகின்றனர்.
இடிந்தகரையில் லூர்து மாதா ஆலயத்தில் பந்தல் அமைத்து அதில் தான் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இடிந்தகரைக்கு பஸ் வசதி முடக்கப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் பேருந்தை விட கோரி நெல்லை கலெக்டரிடம் விஜயாபதி பஞ்சாயத்துத் தலைவர் மனு கொடுத்தார். இதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இடிந்தகரை பகுதிக்கு பஸ்சை இயக்க மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளத்தில அணு உலைக்கு எதிராக உக்கிரமான போராட்டம் நடந்த கால கட்டத்தில் பஸ் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அரசு பஸ்கள் நாகர்கோவில் மண்டலத்திற்கான தடம் எண் 570, நெல்லை மண்டலத்திற்கான தடம் எண் 15 ஆகிய பேருந்துகளை பொங்கலை முன்னிட்டு இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கருணாகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications