முதல்வரின் நிவராண நிதிக்கு ரூ.6 கோடி அளித்த தொழில் அதிபர்கள்
சென்னை: முதல்வரின் நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ரூ.6 கோடி வழங்கினர்.
வரலாறு காணாத கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பிரபலங்கள், தன்னார்வலர்கள் என பலரும் நிதி அளித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் தொழில் அதிபர்கள் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் வைத்து சந்தித்து வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.22 கோடி அளித்தார்கள்.
மேலும் நேற்றும் சில தொழில் அதிபர்கள் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.6 கோடி அளித்தனர். எம்.ஆர்.எப். லிமிடெட்டின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான மேமன் ரூ.3 கோடியும், ராம்கோ குழும துணை தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா ரூ.2 கோடியும், சபாநாயகர் கோயில் பொது தீஷிதர்கள் சார்பில் அதன் செயலாளர் சர்வேஸ்வர தீஷிதர் ரூ.1 கோடியும் அளித்தனர்.
முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பொதுமக்களும் நிதி அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications