பேசாம இந்த பேக்கரியிலேயே கேக் வாங்கலாம் வாங்க..1 "லிட்டர்" ஃப்ரியா தர்றாங்களாம்!!
ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால் ஒரு கிலோ பெட்ரோல் இலவசம் என தனியார் கடை அறிவித்துள்ளது.
வேலூர்: ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று ஒரு பேக்கரி கடையின் அறிவிப்பு வேலூர் மாவட்டத்தில் வேலூரில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
உச்சம், உச்சம் என்று எது உச்சம் என்றே நிர்ணயிக்க முடியாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இன்றைய ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 85.58 பைசாவுக்கும், டீசல் ரூ.78.10 பைசாவுக்கும் விற்கப்பட்டு வருகிறது. இது இன்னும் கொஞ்ச நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சதத்தை எட்டிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தொடந்து விலை ஏற்றம்
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்து நாடு முழுவதும் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. தேசிய அளவில் அனைத்து கட்சி தலைவர்களும் இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பெட்ரோல் அன்பளிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, பெட்ரோல் விலை அதிகரிப்பை காரணம் காட்டி, ஒரு திருமண விழாவில் தம்பதிகளுக்கு 5 லிட்டர் பெட்ரோல் அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. அதேபோல் தற்போது வேலூரில் உள்ள அண்ணாசாலையில் தனியாருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது.

நூதன அறிவிப்பு
சமீப காலமாக இந்த பேக்கரியானது லாபகரமாக செயல்படவில்லை. பார்த்தார் ஓனர்... பெட்ரோல் விலை உயர்வினை மையப்படுத்தி, 1 கிலோ கேக் அல்லது அதே விலைக்கு வேறு ஏதேனும் ஸ்வீட் வாங்கினால், 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று நூதனமான ஒரு அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டார். தங்கள் கடைமுன்பு ஒரு போர்டையும் வைத்தனர்.

பெட்ரோலுக்கு கூப்பன்
ஆஹா.. இது சூப்பரா இருக்கே என்று வேலூர் முழுவதும் தகவல் பரவியது. 1 கிலோ கேக் வாங்கினால் அதற்குரிய பெட்ரோலை ஸ்வீட் கடை தரமுடியாது. அதற்கு பதிலாக ஒரு கூப்பனை தருமாம். அதனை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்டு தனது வண்டிகளுக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள வேண்டுமாம். இந்த விளம்பரம் காரணமாக மக்கள் கூட்டம் பேக்கரி முன்பு கூடி வருகிறதாம். பேக்கரியின் இந்த அறிவிப்பு சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கு தெரியாமல் இருந்தால் சரி!
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications