மொறு மொறு செட்டிநாடு ஸ்நாக்ஸ் வகைகள் முதல் முறையாக ஆன்லைனில்... இது புதுசுங்க

Subscribe to Oneindia Tamil

தென்னிந்தியாவில் மிக பிரபலமான பல உணவு மற்றும் நொறுக்குத்தீனி (ஸ்நாக்ஸ்) வகைகள் உண்டு. அவற்றில் மிக பிரபலமானது செட்டிநாடு உணவு வகைகள். செட்டிநாடு என்றாலே நாவிற்கினிய உணவு வகைகளை கொண்டது என்பதை யாரும் மறக்க முடியாது.

இத்தகைய செட்டிநாடு சமையல் உலக அளவில் பிரபலம் என்று நாம் அறிந்ததே. ஏன் இந்த செட்டிநாடு உலக அளவில் பிரபலம் என்று பார்போம்.

Buy Chettinadu snacks online!

இந்த செட்டிநாடு என்பது தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 96 கிராமங்களை உள்ளடக்கியது. இவற்றில் தற்பொழுது 74 (2007 கணக்கெடுப்பின்படி) கிராமங்கள் மட்டுமே உள்ளன. அதில் காரைக்குடி தேவகோட்டை ஆகிய ஊர்கள் குறிப்படத்தக்க மிக பெரிய ஊர்கள்.

இந்த செட்டிநாட்டை சேர்ந்த மக்கள் பலர் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நாடுகளுக்கு சென்றார்கள். இவர்களின் முக்கிய தொழில்களில் சமையல் செய்யும் முறையும் ஒன்று. இதனால் இவர்களின் பல உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள் உலக அளவில் 20ம் நூற்றாண்டில் பிரபலமாக தொடங்கியது. இந்த செட்டிநாட்டை சேர்ந்த மக்களை நகரத்தார் என்றும் அழைப்பார்கள்.

இந்த செட்டிநாட்டு மக்களின் உணவு வகைகள் சுவை நிறைந்ததாகவும் அதிக நறுமணம் நிறைந்ததாகவும் உள்ளது, இதற்க்கு காரணம் அவர்கள் சமைக்கும் பொழுது பயன்படுத்தப்படும் பல்வகை வாசனைச் சரக்குகள் பிரபலமானவை. வழமையான உணவுக்கு சுவை கூட்டுவது, அவ்வப்போது அரைத்துச் சேர்க்கும் காரமும் நெடியும் நிறைந்த மசாலாக்கள் மற்றும் மேல் அலங்காரமாக வைக்கப்படும் அழகான சில உணவு பொருட்களும்.

செட்டிநாட்டில் உணவு வகைகளை போல பல நொறுக்குதீனி வகைகளும் பிரபலம். அவற்றில் செட்டிநாடு சீப்பு சீடை, செட்டிநாடு சீடை, செட்டிநாடு தட்டை மிக பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சீப்பு சீடை மூன்று பங்கு பச்சரி மாவும், ஒரு பங்கு உளுந்து மாவும் சேர்த்து, இதனுடன் தேங்காய் பால் சேர்த்து தயாரிப்பது ஆகும், இதன் ருசி மிக மிக அதிகம் என்பதை இதை உண்டவர்களுக்கே தெரியும்.

தமிழகத்தின் அணைத்து ஊர்களிலும் தட்டை என்பது மிக பிரபலம் அதிலும் செட்டிநாடு தட்டை என்றால் சொல்லவா வேண்டும், அதன் மனமும் சுவையும் வேறு எந்த நொறுக்கு தீனியும் இதன் அருகில் நிற்க முடியாது. தட்டையும் அரிசி மாவு, கடலை பருப்பு, வெண்ணை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த செட்டிநாட்டை சேர்ந்த பல பிரபலமான நொறுக்குத்தீனி உங்கள் வீட்டிற்கே வந்து சேர்க்கிறது நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) என்ற இணையதளம். விரும்புபவர்கள் இணையத்திலும் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

இவ்வளவு ருசியான செட்டிநாடு உணவு மற்றும் நொறுக்குத்தீனி நம் தமிழ் நாட்டில் பிறந்தது என்பதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்..

நமது தமிழக பாரம்பரியத்தில் உணவுக்கென்று தனி இடம் உண்டு. நமது முன்னோர்களின் தாரக மந்திரமே "உணவே மருந்து மருந்தே உணவு" உணவானது நமது உடல்நலத்தை பேணி வளர்ப்பதாக இருக்க வேண்டும். அது பெருவுணவாயினும் சிறுவுணவாயினுமே.

நம் வாழ்வில் நொறுக்கு தீனிக்கான தனி இடமே மன நிறைவு. சிறு உணவின் மூலமாக உடலுக்கு தேவையான சத்துக்கள் உடனடி ஈடு செய்யபடுகிறது. மண் சார்ந்த உணவு முறை வழியே நொறுக்குதீனி நம் வாழ்வில் முக்கியத்துவமாகிறது. இதற்கு உதாரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா.

இதில் கோவில்பட்டி கடலை மிட்டாயில் 75% கடலை பருப்பும் 24% வெல்லமும் 1% சுக்கும் சேர்க்கப்படுகிறது. கடலை உடலுக்கு அதிக அளவு புரதத்தையும் வெல்லம் பித்தம் நீக்கியாகவும் சுக்கு செரிமான தூண்டியாகவும் செயல்பட்டு உடல் வன்மையை அதிகப்படுத்துகிறது .

திருநெல்வேலி அல்வாவில் குடல் புண்ணை ஆற்றும் சக்தியும் வயிற்றுபோக்கை கட்டுபடுத்தும் சக்தியும் அதன் சுவை மன ஊக்கியாகவும் செயல்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகபடுத்தி நம் உடலுக்கு வன்மையையும் சக்தியும் கொடுக்கிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு சிறந்த உடல் தேற்றியாகவும் பெரியோர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

சிறிய உணவு பெரிய பலன், இதுவே நம் தாரக மந்திரமும் தனிசிறப்புமாக கொண்டு சிறிய உணவில் குறைந்த செலவில் நிறைந்த பலனை அடையலாம்.

நொறுக்குதீனியில் உடல் நலமும் மன நிறைவும் மிக அதிகம். நம் உடல் தேவைக்கேற்ப்ப சக்தியை தேவையான அளவில் சரியான நேரத்தில் நாம் பெறுவதற்கு நொறுக்கு தீனிகளே சிறந்த வழி.

தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள்.

இல்லம் தேடி வருகிறது

நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com)

ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+