இடைத்தேர்தல் முடிவுகள் LIVE: திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா இல்லாமல் தவெக வென்ற தேர்தல் இது! முதல்வர் விஜய் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வரும் நிலையில், கள நிலவரத்தை உடனுக்குடன் பார்க்கலாம்!

By Election 2026  By Election results 2026  Madhuranthagam by election   Dharapuram by election

Oct 09, 2026, 9:30 pm IST

திமுக வேட்பாளர் சுகன்யாவிடம் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்

தாராபுரம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு 2-ஆம் இடம் பெற்ற வேட்பாளர் சுகன்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தைரியாமக இருங்க என்று ஊக்கப்படுத்தினார்.
ஸ்டாலின் கூறுகையில், ”ஏற்கனவே நாம் வாங்கிய ஓட்டுகளை வாங்கிவிட்டோம். ஒன்னும் தப்பு இல்லை. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, மக்களுக்கு நேர்ல போய் நன்றி சொல்லுங்க.. இதுல உங்களோட உழைப்பும் இருக்கு.. தைரியமாகவும் சிறப்பாகவும் செயல்பட்டீர்கள்.. வாழ்த்துகள்” என்றார்.
Oct 09, 2026, 8:42 pm IST

விஜய்யை அதிமுகவினர் எம்ஜிஆராகப் பார்க்கிறார்கள் - ஆதவ் அர்ஜுனா
Oct 09, 2026, 8:39 pm IST

மதுராந்தகம் இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகளின் ஒப்பீடு!
Oct 09, 2026, 8:18 pm IST

தமிழக சட்டசபையில் கட்சிகளின் எம்எல்ஏக்கள் பலம்

தவெக - 109
திமுக - 59
அதிமுக - 41
காங்கிரஸ் - 5
பாமக - 4
விசிக - 2
சிபிஐ - 2
சிபிஎம் - 2
ஐயுஎம்.எல் - 2
அமமுக -1
பாஜக - 1
தேமுதிக - 1
Oct 09, 2026, 8:17 pm IST

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகள்

திருச்சி கிழக்கு
விராலிமலை
பெருந்துறை
கரூர்
அம்பாசமுத்திரம்
Oct 09, 2026, 8:12 pm IST

சட்டசபையில் தவெகவின் பலம் 109 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் காலியாக இருந்த தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா வெற்றி பெற்றதால் சட்டசபையில் தவெகவின் பலம் 107-இல் இருந்து 109 ஆக அதிகரித்துள்ளது.
Oct 09, 2026, 8:04 pm IST

இடைத்தேர்தல் வெற்றி மக்கள் நம்பிக்கையை பறைசாற்றுகிறது - விஜயபாஸ்கர்

‘மக்களின் நம்பிக்கையும், மக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள்’ என்பதையும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் பறைசாற்றி இருக்கின்றது என சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், தங்கமான திட்டங்களைத் தந்து.. மக்களின் இதயங்களில் தங்க சிம்மாசனத்தில் நிறைந்து இருக்கும் முதல்வர் விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Oct 09, 2026, 7:52 pm IST

திமுக, அதிமுகவுக்கு வெற்றிகரமான தோல்வி

தாராபுரத்தில் சத்தியபாமா 66,841 வாக்குகளும், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றாலும் திமுக, அதிமுகவை டெபாசிட் இழக்கச் செய்யும் வகையில் வெற்றி பெறவில்லை.
திமுக இரு தொகுதிகளிலும் இரண்டாம் இடம் பெற்றது. மதுராந்தகத்தில் 59,838 வாக்குகளையும், தாராபுரத்தில் 57,370 வாக்குகளையும் பெற்றது. 3 ஆம் இடம் பிடித்த அதிமுக மதுராந்தகத்தில் 69,284 வாக்குகளும், தாராபுரத்தில் 45,280 வாக்குகளும் பெற்றது. இரண்டு தொகுதிகளிலும் திமுகவும், அதிமுகவும் படுதோல்வி என்று இல்லாமல், வெற்றிகரமான தோல்வியே அடைந்துள்ளது.
Oct 09, 2026, 7:08 pm IST

தாராபுரத்தில் வீச்சு பரோட்டா - நிர்மல் குமார்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், மின் துறை அமைச்சருமான நிர்மல் குமார் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது. மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா.. தாராபுரத்தில் வீச்சு பரோட்டா.. என்று தேர்தல் வெற்றி குறித்து பதிவிட்டுள்ளார்.
Oct 09, 2026, 7:08 pm IST

அம்மா ஆட்சி மீண்டும் அமையும் - டிடிவி தினகரன்

“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்” என்பது போல, தமிழகத்தைக் கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான் எனவும், தமிழகத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ள இந்த இரவல் ஆட்சி விரைவில் வீழ்த்தப்பட்டு அம்மாவின் ஆட்சி மீண்டும் அமையும் என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.
Oct 09, 2026, 7:01 pm IST

தவெகவை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ

என் தொகுதியில் வெற்றி பெற்ற போது கூட நான் இவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை. இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியில் இருக்கிறோம். இனி தவெகவை அசைக்க முடியாது என கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் பேட்டியளித்தார் .
Oct 09, 2026, 6:51 pm IST

வெறிச்சோடிய திமுக, அதிமுக கட்சி அலுவலகங்கள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக தோல்வியை தழுவின. இதனால், அக்கட்சியின் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Oct 09, 2026, 6:31 pm IST

திமுக மீண்டும் வெல்லும் - திவ்யா சத்யராஜ்

இரு தொகுதி இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட திமுக 2ஆம் இடம் பிடித்துள்ள நிலையில் இது குறித்து ட்வீட் பதிவிட்டுள்ள திவ்யா சத்யராஜ், “எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளிலும் இனி உதயசூரியனே போட்டியிட வேண்டும். நம் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு தங்களால் தான் திமுக வென்றது என்று கூறிவந்த SOFA துரோகிகள் அவர்களின் இடத்தை உணரட்டும்” என்று கூறியுள்ளார்.
5 நிமிடங்கள் பேசினாலே ஒரு லட்சம் வாக்குகள் விழும் என பில்டப் கொடுத்த தவெக, 2 தொகுதிகளிலும் இவ்வளவு உருண்டும், 10 ஆயிரம், 20 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறது. திமுக மீண்டும் வெல்லும்” என பதிவிட்டுள்ளார்.
Oct 09, 2026, 6:20 pm IST

இடைத்தேர்தல் முடிவு - சிபிஎம் சண்முகம் கருத்து

எங்கள் பணி நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மட்டுமல்ல, வீதிகளில் தொடரும்.. நம்பிக்கையோடு மக்கள் பணிக்கு எங்களை எதிர்காலத்திலும் அர்ப்பணித்து கொள்வோம். - இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஎம் செயலாளர் சண்முகம்
Oct 09, 2026, 5:59 pm IST

வெற்றியை தலைமைக்கு சமர்ப்பிக்கிறேன் - சத்தியபாமா

எத்தனையோ தடைகளுக்கு பிறகு தாராபுரத்தில் வெற்றி பெற்று இருக்கிறேன். இந்த வெற்றியை தலைமைக்கு சமர்ப்பிக்கிறேன். தாராபுரம் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். விஜய்யின் நல்லாட்சியை மக்கள் நேசிப்பதாலும், விஜய் மீண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதாலும் எங்களுக்கு வாக்களித்துள்ளனர் என திருப்பூரில் சத்தியபாமா பேட்டியளித்தார்.
Oct 09, 2026, 5:36 pm IST

துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி - மு.க ஸ்டாலின் துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி. பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. 5 மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல்.. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலத்தை நம்பி களமிறங்கியது தவெக. ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Oct 09, 2026, 5:24 pm IST

இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் பதிவு!
Oct 09, 2026, 5:19 pm IST

விசிக அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும் என மக்கள் உறுதிப்படுத்திவிட்டனர். இடைத்தேர்தல் வெற்றி தவெக தலைமையிலான கூட்டணி அரசுக்கு மக்கள் கிடைத்த அங்கீகாரம். கூட்டணி ஆதரவோடு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்- எம்பியும் விசிக தலைவருமான திருமாவளவன்
Oct 09, 2026, 5:08 pm IST

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் நாம் தமிழர் மற்றும் இடதுசாரிகள் டெபாசிட் இழந்தன. இரு தொகுதிகளிலும் நாம் தமிழர் 4ஆவது இடத்தை பிடித்த நிலையில், இடதுசாரிகள் 5ம் தள்ளப்பட்டன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளிலும் இனி உதயசூரியனே போட்டியிட வேண்டும். நம் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு தங்களால் தான் திமுக வென்றது என்று கூறிவந்த SOFA துரோகிகள் அவர்களின் இடத்தை உணரட்டும். "எங்கள் தலைவர் 5 நிமிடங்கள் பேசினாலே ஒரு லட்சம் வாக்குகள் விழும்" என்று பில்டப் கொடுத்த தவெக, இரண்டு தொகுதிகளிலும் இவ்வளவு உருண்டும் பத்தாயிரத்துக்கும் இருபதாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறது. இனியாவது அவர்கள் வானத்திலிருந்து இறங்கி பூமிக்கு வருவார்கள் என நம்புவோம். That was a good fight. திமுக மீண்டும் வெல்லும் - சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ்
Oct 09, 2026, 5:03 pm IST

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் நாம் தமிழர் மற்றும் இடதுசாரிகள் டெபாசிட் இழந்தன. இரு தொகுதிகளிலும் நாம் தமிழர் 4ஆவது இடத்தை பிடித்த நிலையில், இடதுசாரிகள் 5ம் தள்ளப்பட்டன.
Oct 09, 2026, 4:55 pm IST

தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Oct 09, 2026, 4:46 pm IST

முதல்வர் விஜய்யின் 4 மாத நல்லாட்சிக்கான வெற்றி. வரும் நாட்களிலும் தவெகவின் நல்லாட்சி தொடரும். எடப்பாடி சுயநலத்திற்காக கட்சியை கைப்பற்றியுள்ளார் - தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நிர்மல் குமார் பேட்டி
Oct 09, 2026, 4:31 pm IST

விஜய்க்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாக இதை கருத வேண்டும் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அவர் மேலும், "த.வெ.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க., அ.தி.மு.க. கட்டவிழ்த்துவிட்ட அவதூறு பிரச்சாரங்களை மக்கள் புறக்கணித்து த.வெ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்த இடைத் தேர்தல் வெற்றி என்பது முதலமைச்சர் தலைமையிலான அரசுக்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. தமிழ்நாட்டில் 25 ஆண்டுக்களுக்கு பிறகு ஒரு இடைத் தேர்தலுக்கு பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி, இடைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Oct 09, 2026, 4:14 pm IST

பாமக தலைவர் அன்புமணிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசியில் அழைத்து முதல்வர் விஜய் அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இடைத்தேர்தல் வெற்றிக்காக விஜய்க்கும் அன்புமணி வாழ்த்து கூறினார்.
Oct 09, 2026, 3:57 pm IST

மதுராந்தகம் தொகுதியிலும் தவெக வெற்றி மரகதம் குமரவேல் உறுதியாகியுள்ளது. வெற்றி வித்தியாசத்தை விட குறைவான வாக்குகளே எண்ண வேண்டி உள்ள நிலையில், தவெக வெற்றி உறுதியாகியுள்ளது.
Oct 09, 2026, 3:51 pm IST

Oct 09, 2026, 3:38 pm IST

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி! 5,699 வாக்குகள் மட்டுமே தாராபுரத்தில் எண்ண வேண்டிய நிலை உள்ளது. தவெக வேட்பாளர் சத்தியபாமா 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் இருக்கிறார். இதனால் சத்தியபாமா வெற்றி உறுதியாகியுள்ளது.
Oct 09, 2026, 3:28 pm IST

மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி என 3 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது நாதக.. குறிப்பாக புதுச்சேரியில் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
Oct 09, 2026, 3:17 pm IST

Oct 09, 2026, 2:53 pm IST

வெற்றி கொண்டாட்டத்தில் தவெக தொண்டர்கள்!
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+