19ம் தேதி இடைத் தேர்தல்.. புதுச்சேரியில் 144!
நெல்லித்தோப்பு இடைத் தேர்தலையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: நெல்லித்தோப்பு இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரியில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு நாளை மறு நாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தலின் போத அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இன்று மாலை 5 மணி முதல் 144 தடை ஆணை நடைமுறைக்கு வரும் என அறவிக்கப்பட்டுள்ளது.
இந்த 144 தடை ஆணை வாக்குப்பதிவு முடிந்த பின்னர் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு அம்மாநில கலால்துறை ஏற்கனவே 3 நாள் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications