இடைத்தேர்தல்: ஏற்காட்டில் காரில் இருந்து ரூ.2.2 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் கண்காணிப்பு குழு
Subscribe to Oneindia Tamil

ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சி. பெருமாள் இறந்ததையடுத்து அந்த தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் பெருமாளின் மனைவி சரோஜா போட்டியிடுகிறார். திமுக சார்பில் மாறன் போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி ஏற்காட்டில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட ஆச்சாங்குட்டப்படி சோதனைச் சாவடியில் நேற்று அந்த வழியாக வந்த வாகனங்களை தேர்தல் கண்காணிப்பு குழு சோதனை செய்தது. அப்போது ஒரு காரை சோதனையிட்டதில் அதில் ஒரு பையில் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அந்த பணத்தை முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு குழு அந்த பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தது. காரில் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications