ஜெ.வுக்கு எதிராக ஆர்.கே.நகரில் களமிறங்கும் இந்திய கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன்
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மாநில செயற்குழு உறுப்பினரான சி.மகேந்திரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வரும் 9ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்தத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக டிராஃபிக் ராமசாமி ஏற்கனவே, மனுத் தாக்கல் செய்துள்ளார். இன்று மதியம் சுமார் 2 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சி.மகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் வரும் 9ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல், தீண்டாமைக்கு எதிரான மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நேர்மையாக நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, "இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளின் சார்பாக சி.மகேந்திரனை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் முன்னிறுத்தியுள்ளோம்'' என்று கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications