நீட் தேர்வு.. குறுவை சாகுபடி.. எம்எல்ஏக்களுக்கு லஞ்சம்.. பரபரப்பில் தொடங்கியது அமைச்சரவைக் கூட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கூடியுள்ளது. இதில் பல்வேறு முக்கிய விஷங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்கூட்டத்தில் நாளை தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது, புதிய திட்டங்கள், மசோதாக்கள் குறித்த ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், நீட் தேர்வு, குறுவை சாகுபடி குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Cabinet meetings starts

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்எல்ஏக்களுக்கு கோடி கோடியாக பணம் மற்றும் தங்கம் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்தெல்லாம் சட்டசபையில் எதிர்க் கட்சிகள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்கட்சிகளை எப்படி சமாளிப்பது, எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளுக்கு தகுந்த பதில் எப்படி அளிப்பது என்பது குறித்தெல்லாம் விவாதிக்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Cabinet meeting has started at secretariat at 4.30 pm today.
Please Wait while comments are loading...