முதல்வருக்கு முற்றுகிறது நெருக்கடி.. பரபரப்பான சூழலில் அமைச்சரவைக் கூட்டம்.. விவாதிக்கப்பட்டது என்ன?
பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கூடியது.
அதிமுக அம்மா அணியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் திடீரென்று தனி அணியாக சென்று முதல்வரை அண்மையில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது, விரைவில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

எம்எல்ஏக்கள் தனித்தனி அணியாக சென்று முதல்வரை சந்தித்து பேசியதை அடுத்து அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் கூடும் என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் கூடியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மே 2-ம் தேதி தலைமை செயலகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்த பரபரப்பான சூழலில் அமைச்சரவைக் கூடியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications