திமுகவில் இருந்து மட்டும்தான் நீக்கமுடியும்… மகன் இல்லையென நீக்கமுடியுமா?: அழகிரி
தஞ்சாவூர்: திமுகவில் இருந்து மட்டுமே என்னை நீக்க முடியும்... என்னை தன் மகன் இல்லை என கருணாநிதி நீக்கமுடியுமா? என மு.க.அழகிரி ஆவேசமாக கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் கட்சியின் நிர்வாகி ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற திருமண வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''எனது படம் போட்டு தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடியது போன்று போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக எனது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதா? அவர்களை நீக்கியது ஏன்? என தலைவரிடம் நேரில் கேட்டேன். பொதுச் செயலாளரிடம் கேட்டு சொல்கிறேன் என்றார். திடீரென்று என்னையும் கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள். இருந்தாலும், எனக்கு தனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.
சாகும் வரை திமுகதான்
தி.மு.க.தான் நம்முடைய கட்சி. நாம் ஏன் வெளியே போகவேண்டும். சாகும் வரை கறுப்பு சிகப்பு கரை போட்ட வேட்டிதான் கட்டுவேன். தி.மு.க.வில் இருந்து என்னை நீக்கி உள்ளனர். ஆனால் கலைஞர் என்னை தனது மகன் இல்லை என நீக்க முடியுமா?
பணம் கொடுத்த டி.ஆர். பாலு
தஞ்சை தொகுதி தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். அவர் எவ்வளவு பணம் கொடுத்து அந்த சீட்டை வாங்கினார் என்பது எனக்கு தெரியும். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை. பழனிமாணிக்கத்துக்கு கொடுக்காவிட்டாலும், கட்சியில் உழைத்த வேறு யாருக்காவது சீட் கொடுத்திருக்கலாம்.
பத்து கப்பல் இருக்கு
கடந்த முறை டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அதனால்தான் இந்த தொகுதிக்கு வந்துள்ளார். டி.ஆர்.பாலுவுக்கு 10 கப்பல் உள்ளது. எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவேன் என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா அல்லது தலைவர் கலைஞரா?
எங்களுக்குத் தெரியும்
தேர்தல் குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்வதற்காக இங்கு வந்துள்ளேன். எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த தேர்தலை விட்டால் நமக்கு வேறு வாய்ப்பு இல்லை'' என்றார்.
நோட்டீஸ் வரவில்லை
பின்னர் திருச்சியில் பேசிய அவர், திமுகவில் இருந்து நீக்கியது குறித்து அதிகாரபூர்வ கடிதம் எனக்கு இது வரை வரவில்லை; வைகோ நீக்கப்பட்டபோது, அவருக்கு அதிகாரபூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் எனக்கு இதுவரை வரவில்லை என்று கூறினார்.
திமுக வெற்றி வாய்ப்பு
திருச்சியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், நான் கட்சியில் இல்லை, எனவே திருச்சி வெற்றி வாய்ப்பு குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது என்றார்.
அவங்க கிட்ட கேளுங்க
உங்களை நீக்கியவர்கள், உங்கள் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி.க்கள் ஜே.கே.ரித்தீஷ், நெப்போலியன் ஆகியோரை ஏன் நீக்கவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர், அதை அவர்களிடம்தான் கேட்கவேண்டும் என்று பதிலளித்துவிட்டு விமான நிலையம் சென்றார் அழகிரி.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications