பாஜகவின் 8 ஆண்டுகள் சாதனை அல்ல... வேதனையும், சோதனையும் தான்... விளாசிய சீமான்...!
நெல்லை: பாஜகவின் 8 ஆண்டுகள் சாதனையை பற்றி ஒரேயொரு முறை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேச முடியுமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பாஜக - நாம் தமிழர் கட்சி இடையே காரசார விவாதங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் 8 ஆண்டுகள் ஆட்சி, அதிமுக - பாஜக கூட்டணி, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமருக்கு சீமான் சவால்
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பாஜகவின் 8 ஆண்டுகள் சாதனை என்பது பொதுக்கூட்டம் வைத்து அனைவருக்கும் விளக்க வேண்டிய நிலையில் மட்டுமே உள்ளது. சாதனை என்பது எல்லாருக்கும் கண்கூடாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பாஜக ஆட்சியின் சாதனை யாருக்கும் தெரியவில்லை. பாஜக ஆட்சியின் 8 ஆண்டு மக்களுக்கு வேதனையையும், சோதனையையும் தான் அளித்துள்ளது. முடிந்தால் பாஜகவின் 8 ஆண்டுகள் ஆட்சி பற்றி செய்தியாளர் சந்திப்பு நடத்தி பிரதமர் மோடி கூற முடியுமா என்று சவால் விடுத்துள்ளார்.

பாஜக ஒரு ஊழல் கட்சி
அண்மைக் காலமாக திமுக ஊழலில் ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி வருகிறார். இதுகுறித்து சீமான் கூறுகையில், ஊழலைப் பற்றி பேசும் பாஜக, ஊழல் கட்சிகளோடு ஏன் கூட்டணி வைத்துள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக செய்த ஊழல் பற்றி விமர்சிக்காமல் பாஜக கூட்டணி வைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ரூ.100 கோடி செலவு செய்த பாஜகவும் ஊழல் கட்சித் தான் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி நாம் தமிழர் தான்
தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் களத்தில் போராடி வருவதாக சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கு எதிராகவும் நாங்கள் தான் போராடுகிறோம். ஒவ்வொரு தவறான நடவடிக்கைக்கும் நாங்கள் தான் அறிக்கை வெளியிட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

நுபுர் ஷர்மா சர்ச்சை
நுபுர் ஷர்மா சர்ச்சை குறித்து பேசிய சீமான், நுபுர் ஷர்மாவின் பேச்சின் மூலம் நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக - ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்களை தேர்வு செய்யாததன் மூலம், அவர்களை புறக்கணிப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்று விமர்சித்துள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications