கொஞ்சம் பொறுங்க.. ராஜபக்சே இன்னும் முழுமையாக அணையவில்லை.. உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாம்!
சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றிருக்கலாம். ஆனால் அவரது கட்சிதான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ளது. எனவே அதை வைத்து அவர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு பெரும் குடைச்சல் கொடுக்க முயலலாம் என்று அஞ்சப்படுகிறது.
இலங்கை அதிபராக இருந்து வந்த ராஜபக்சே தனது பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தோல்வி பயத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல அவரது எதிர்ப்பாளரான மைத்ரிபால சிறிசேனாவிடம் தோற்றுப் போய் விட்டார்.

இருப்பினும் ராஜபக்சேவின் அத்தியாயம் இத்துடன் முடியவில்லை. மாறாக நாடாளுமன்றத்தில் உள்ள தனது இலங்கை சுதந்திராக் கட்சியின் மூலமாக புதிய அதிபருக்கு அவர் குடைச்சலைக் கொடுக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
மொத்தம் 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே கூட்டணிக்கு மொத்தமாக 144 இடங்கள் உள்ளன. இதில் பல கட்சிகள் வெளியேறி விட்டன. அப்படிப் போயும் கூட அக்கட்சிக்கு பெருவாரியான உறுப்பினர்கள் உள்ளன.
2வது பெரிய கட்சியாக ரணில் விக்கிரமசிங்கேவி்ன் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. 3வது பெரிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு. இக்கட்சிக்கு 14 எம்.,பிக்கள் உள்ளனர். 4வது கட்சியாக சரத் பொன்சேகாவின் கட்சிக்கு 7 பேர் உள்ளனர்.
தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள தனது ஆதரவு எம்.பிக்களை வைத்து அதிபரின் அதிகாரங்களைப் பறித்து பிரதமர் வசம் மாற்றும் வகையில் நடவடிக்கைகளை ராஜபக்சே மேற்கொள்ளலாம் என்று சந்தேகிக்கிப்படுகிறது.
இருப்பினும் முன்னாள் அதிபர் சந்திரிகா வசம் சுதந்திராக் கட்சி முழுமையாக சாயும் பட்சத்தில் இந்த நகர்வு தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இலங்கையில் பிரதமர் பதவி என்பது பொம்மை பதவியாகும். உருப்படியான அதிகாரம் பிரதமருக்குக் கிடையாது. மாறாக அதிபரிடம்தான் அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications