For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட்: ஐபிஎல்லுக்காக புனேவிற்கு ரயில் சென்றுள்ளது.. மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லை- ரயில்வே துறை

நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஐபிஎல்லுக்காக சிறப்பு ரயில்...மாணவர்களுக்கு இல்லை- வீடியோ

    சென்னை: வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஐபிஎல்லுக்காக புனேவிற்கு ரயில் சென்றதால் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று மோசமான விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    Cant arrange special train for TN students to write their NEET in other states says, Railway

    இதில் சிபிஎஸ்இக்கு எதிராக தீர்ப்பு வந்தது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. தற்போது இதில் சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கு தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

    அதில் நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஐபிஎல்லுக்காக புனேவிற்கு ரயில் சென்றதால் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று மோசமான விளக்கம் அளித்துள்ளனர்.

    மேலும் ''புனேவிற்கு சென்ற ரயில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது. அதை அவசரமாக கொண்டு வர முடியாது. தற்போது சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய போதுமான ரயில்கள் கைவசம் இல்லை. 5,000 பேருக்கு திடீர் என்று ரயில் ஒதுக்க முடியாது'' என்றுள்ளது.

    முக்கியமாக சிறப்பு ரயில் ஒதுக்க தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. அரசு கேட்டுக்கொண்டால் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றுள்ளனர்.

    English summary
    SC has revoked the Madras High court order to cancelled the CBSE's order on NEET exam centres in Other States. Can't arrange special train for TN students to write their NEET in other states says, Railway.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X