மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் கறார்!
சென்னை: மக்கள் நலகூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது. தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரிலேயே போட்டியிடுவோம் என அக்கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலையொட்டி, மக்கள் நலக்கூட்டணி, தேமுதிகவுடன் இணைந்துள்ளது. இக்கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அன்று, இப்புதிய கூட்டணிக்கு விஜயகாந்த் அணி என வைகோ பெயரிட்டார்.

ஆனால், அப்படியெல்லாம் அழைக்க முடியாது என மூத்த தலைவர் நல்லகண்ணு கூறிவிட்டார். ஆனால், கிராமங்களில் விஜயகாந்த் அணி என்று சொன்னால் தான் புரியும் என பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், மக்கள்நலக்கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், ‘மக்கள் நல கூட்டணியை விஜயகாந்த் அணி என்று அழைக்க முடியாது. தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுவோம்' என்றார்.
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடும் என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications