எச்.ராஜாவுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் மறுப்பு!

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எச்.ராஜாவுக்கு எதிராக தானாக நடவடிக்கை எடுக்க முடியாது..உயர்நீதிமன்றம் மறுப்பு- வீடியோ

    சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தவறு செய்திருந்தால் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கொச்சையாக திட்டினார். அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

    கோரிக்கை வைத்தனர்

    கோரிக்கை வைத்தனர்

    இந்த நிலையில் நீதிமன்றத்தை இழிவாக பேசியதால், எச்.ராஜா மீது வழக்கறிஞர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் எச்.ராஜாவிற்கு எதிராக வழக்கு தானாக முன்வந்து விசாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. மூன்று மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதி முன் இந்த கோரிக்கையை வைத்தனர்.

    மறுப்பு தெரிவித்தனர்

    மறுப்பு தெரிவித்தனர்

    ஆனால் எச்.ராஜாவுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவர் மீது வழக்கு தொடுக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் 3 வழக்கறிஞர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    புகார் அளிக்கலாம்

    புகார் அளிக்கலாம்

    அதே சமயம் இரண்டு அறிவுரை வழங்கி உள்ளது. முதலாவதாக எச்.ராஜாவிற்கு எதிராக போலீசில் புகார் அளிக்க கூறியுள்ளது. அவர் தவறு செய்திருக்கும் பட்சத்தில் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளது. அதன்பின் அந்த வழக்கை வேண்டுமானால் விசாரிக்கலாம் என்றுள்ளார் நீதிபதி.

    வேறு என்ன அறிவுரை

    வேறு என்ன அறிவுரை

    மேலும் இரண்டாவது அறிவுரையில், நீதிமன்ற அவமதிப்பு என மனுவாக தாக்கல் செய்யுங்கள். அப்படி தாக்கல் செய்தால் அந்த மனு மீது விசாரிக்கப்படும். முகாந்திரம் இருந்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும், என்று கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+