ஈழத் தமிழர் திருமண தாலியில் திருவள்ளுவர், பிரபாகரன் உருவம் பொறித்த தங்ககாசுகள்!
சென்னை: விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மற்றும் திருவள்ளுவர் ஆகிய தமிழர் அடையாளங்களுடன் தங்க காசில் உருவம் பொறித்து அதை தாலியாக மணமகள் கழுத்தில் அணிவித்து ஒரு திருமணம் நடந்துள்ளது கனடாவில்.
கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களான கார்த்திக் மற்றும் மீரா ஆகியோர் தங்களின் திருமணத்தினை ஒரு அடையாளத்துடன் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

இதையடுத்து உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வாழும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் உருவத்தை தங்ககாசு ஒன்றில் பொறித்தனர். மறுபக்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலி உருவம் இருந்தது. மற்றொரு காசில் திருவள்ளுவரின் உருவம் இருந்தது. நடுநாயகமாக தங்கத்தாலி இருக்க இருபுறமும் அந்த காசுகள் கோர்க்கப்பட்டது.
அந்த தாலியை மணமகள் மீராவின் கழுத்தில் கட்டினார் கார்த்திக். பின்னர் இருவரும் தலைவர் பிரபாரன் சிலை முன்பாக நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications