நடிகர் சங்க கட்டடம்... சத்யம் சினிமா ஒப்பந்தம் ரத்தாகலையாமே!
சென்னை: நடிகர் சங்கக் கட்டடம் கட்ட எஸ்பிஐ சினிமாவுடன் (சத்யம்) போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக நடிகர் சரத்குமார் அறிவித்தாலும், அது உண்மையில்லை. இன்னும் ஒப்பந்தம் எஸ்பிஐ சினிமா வசமே உள்ளதாக பதிவாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், எஸ்பிஐ சினிமாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை, செப்டம்பர் 29-ம் தேதியே ரத்து செய்துவிட்டோம் என்று சரத்குமார் கூறினார். அதற்கான ஆவணங்களையும் காட்டினார். எஸ்பிஐ சினிமா லெட்டர்பேடில் இந்த ஒப்பந்த ரத்து விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஒப்பந்த ரத்து பதிவு செய்யப்படவில்லை என பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், "நவம்பர் 26, 2010-ல் நடிகர் சங்க அறக்கட்டளையும் சத்யம் சினிமாஸும் (எஸ்பிஐ) ஒப்பந்தம் செய்து, அதை முறையாகப் பதிவு செய்தனர். இப்போது தி நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்தப் பத்திரம் உள்ளது.
இதனை ரத்து செய்ய வேண்டுமானாலும், அதற்கான ரத்து ஆவணம் தயார் செய்து அதனை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. எனவே இந்த நிமிடம் வரை அப்படி எந்த ஆவணமும் பதிவு செய்யப்படவில்லை. எனவே நடிகர் சங்க நிலம் இன்னமும் சத்யம் சினிமா வசம்தான் உள்ளது," என்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications