ம.பி. மாநில ரயில் நிலைய தீவிபத்து: திருக்குறள் எக்ஸ்பிரஸ் 2 நாட்கள் ரத்து

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: மத்திய பிரதேசம் மாநிலம் இடார்சியில் நடந்த ரயில் நிலைய மின்சார விபத்தை தொடர்ந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்திலிருந்து மபி செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தால் மேலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஹேம்ராஜ் மீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

Cancellation of Tirukural express

ரயில் எண் 12644 நிஜாமுதீன்-திருவனந்தபுரம் சென்ட்ரல் சுவர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து 26ம் தேதி காலை 5.55 மணிக்கு புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 12642 நிஜாமுதீன்-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் நிஜாமுதீனில் இருந்து 27ம் தேதி காலை 7.15 மணிக்கு புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் தீ விபத்து காரணமாக சிக்னலில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய மேலும் பல ரயில்கள் ரத்து செல்லப்பட்டுள்ளன தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ரயில் எண் 12269 சென்னை சென்டிரலில் இருந்து எச்.நிஜாமுதீனுக்கு இன்று காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய துரந்தோ (வாரம் இருமுறை) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல ரயில் எண் 12616 டெல்லியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இன்று மாலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய கிராண்ட் டிரங்க் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 16032 ஜம்முதாவியில் இருந்து நாளை இரவு 11.45 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு புறப்பட வேண்டிய அந்தமான் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 12389 பாட்னாவில் இருந்து வருகிற 28ம்தேதி இரவு 7.55 மணிக்கு பெங்களூருக்கு புறப்பட வேண்டிய சங்கமித்ரா ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல ரயில் எண் 12296 கயாவில் இருந்து இன்று காலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 22404 டெல்லியில் இருந்து வருகிற 28ம்தேதி இரவு 11.50 மணிக்கு புதுச்சேரிக்கு (சென்னை எழும்பூர் வழியாக) செல்ல வேண்டிய ரத்து செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+