ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணம் 3 நாட்களில் திருப்பி அளிக்கப்படும்: தெற்கு ரயில்வே
சென்னை: ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம் 3 நாட்களில் திருப்பி அளிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பை மனதில் வைத்து கடந்த மாதம் மட்டும் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து சென்னை வெள்ளக்காடாகியுள்ள நிலையில் நேற்று 41 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இது தவிர 20க்கும் மேற்பட்ட ரயில் சேவை பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டது. ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கியவர்களுக்காக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் பணம் பயணிகளுக்கு 3 நாட்களில் திருப்பி அளிக்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படும். ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் 3 நாட்கள் கழித்து அங்கு சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications