ஜெயா டிவி, ஜெயா பிளஸ்ஸில் வாக்கு எண்ணிக்கை 'லைவ்': ஜெயா மேக்ஸில் எம்.ஜி.ஆர்.-ஜெ. டூயட்
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த செய்திகள் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சொந்தமான கேப்டன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பாகவில்லை.
ஆர்.கே. நகர் தொகுதியில் கடந்த 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா முன்னிலை வகித்து வருகிறார்.
அம்மா தான் வெற்றி பெறுவார் என்று கூறி அதிமுகவினர் ஏற்கனவே கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர்.

ஜெயா பிளஸ்
ஜெயா பிளஸ் செய்தி தொலைக்காட்சியில் வாக்கு எண்ணிக்கை குறித்த செய்திகள் தான் காலையில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

கேப்டன் நியூஸ்
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சொந்தமான கேப்டன் நியூஸ் சேனலில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி செய்தி எதுவும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மாறாக ஹெல்மெட் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் செய்திகள்
கலைஞர் டிவியில் வழக்கமான செய்திகள், மத்திய அரசின் ஊழல் செய்திகள் ஒளிபரப்பாகி வருகின்றது. கேப்டன் நியூஸை போன்றே கலைஞர் செய்திகள் சேனலும் வாக்கு எண்ணிக்கை செய்தியை கண்டுகொள்ளவில்லை.

ஜெயா டிவி
ஜெயா டிவியில் வழக்கமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை செய்திகள் காண்பிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.












Click it and Unblock the Notifications