திமுக கூட்டணி மூழ்கும் கப்பல்.. "கேப்டன்" போக மாட்டார்.. பொன். ராதா
சிவகாசி: திமுக கூட்டணி என்பது மூழ்கும் கப்பல் போன்றது. அதற்கு "கேப்டன்" போக மாட்டார் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
சிவகாசியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கவிருக்கின்றன. எந்தக் கட்சிக்கும் தனியே போட்டியிட விருப்பமில்லை.

அப்படி இருக்கும்போது நாங்கள் மட்டும் எப்படி தனித்துப் போட்டியிட முடியும். எனவே பாரதிய ஜனதா கட்சியும் தமிழக தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடும்.
விஜயகாந்த் நடத்தும் கட்சி மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் இக்கூட்டணி கடலில் மூழ்கும் கப்பலைப் போன்றது. இந்த கப்பலுக்கு கேப்டன் (விஜயகாந்த்) செல்வாரா?.
பாஜக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதுகுறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications