கோவையில் வீட்டிற்குள் கார் புகுந்து விபத்து: 1 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு
கோவை: கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: துடியலூரில் ஏற்பட்ட கார் விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த பிரியா ஆறுச்சாமி தம்பதியினர் உட்பட 9 பேர் பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள உறவினர்களை சந்தித்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை கோவை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கோவை ஆத்துபாலம் அருகே வந்தபோது கார் கட்டுபாட்டை இழந்து மரத்தின் மீது மோதி அருகே இருந்த வீட்டின் சுவர் மீது இடித்து நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த லட்சுமி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் பயணம் செய்த கன்ஷிகா என்ற 1 வயது குழந்தை பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தது. இந்த விபத்தில் சிக்கிய 7 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த லட்சுமி என்ற மற்றொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்து குறித்து போத்தனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications