திருச்சி அருகே பயங்கரம்.. கிணற்றில் பாய்ந்த கார்... அண்ணன், தம்பி பலி
திருச்சி: திருச்சி மாவட்டம் விராலி மலை அருகே கார் ஒன்று கிணற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அண்ணன், தம்பி பலியாகினர். அவர்களின் தந்தை படுகாயமடைந்தார்.
திருச்சியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். 51 வயதான இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சந்தோஷ் (23), திருச்சி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்.

இளைய மகன் கோபுவை அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ப்பது தொடர்பாக இரு மகன்களுடனும் ராஜசேகரன் காரில் கிளம்பினார்.
விராலிமலை அருகே வாடியன்களம் என்ற இடத்தில் கார் வந்தபோது திடீரென ராஜேசகரனின் கட்டுப்பாட்டிலிருந்து கார் நழுவியது. தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த காலி கிணற்றில் போய் விழுந்து நொறுங்கியது.
கார் ஒன்று கிணற்றில் பாய்ந்ததைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் போனது.

அனைவரும் சேர்ந்து மீட்பு முயற்சியில் குதித்தனர். இதில் படுகாயமடைந்த நிலையில் மூன்று பேரும் வெளியே கொண்டு வரப்பட்டனர். ஆனால் சற்று நேரத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கோபு உயிரிழந்தார். தற்போது ராஜசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications